26 டிச., 2009

உலகம் காஸ்ஸாவை வஞ்சித்துவிட்டன: சர்வதேச மனித உரிமை அமைப்புகள்

லண்டன்:பெண்களும் குழந்தைகளும் உட்பட 15 லட்சம் ஃபலஸ்தீனர்களை தடை வளைப்பின்(blockade) பெயரால் துயரத்தில் சிக்கித்தவிக்கும் காஸ்ஸாவுக்கு உதவுவதற்கு தயாராகாத உலக நாடுகள் காஸ்ஸாவை வஞ்சித்துவிட்டன என்று 16 பிரபலமான மனித உரிமைப்புகள் தயார் செய்து வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் செய்த மாபாதகச்செயலை உலகம் மெளனத்தால் அங்கீகரிக்கிறது. தடைவளைப்பினை(blockade) நீக்குவதற்கும் யுத்தத்தில் தகர்ந்துபோன வீடுகளை புனர்நிர்மாணிக்கவும் உதவிகளை செய்வதற்கு சற்றும் தாமதிக்கக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னெஸ்டி, ஓக்ஸ்போர்ம் ஆகியவை உட்பட்ட மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

41 லோட் கட்டுமானப்பொருள்களை மட்டுமே காஸ்ஸாவிற்குள் அனுமதித்துள்ளது இஸ்ரேல். அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சுரங்கங்களை இஸ்ரேலும், எகிப்தும் பூட்டிப்போட்டுள்ளன. நோயாளிகளுக்கு சிகிட்சையும் மறுக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் இச்செயல் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமென்றும் இதற்கெதிராக உலகம் விழித்தெழவேண்டுமென்றும் ஓக்ஸ்போர்ம் சர்வதேச இயக்குநர் ஜரமி ஹோப்ஸ் கூறுகிறார்.

நிலைமைகளை கண்டறியவும், நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவும் காஸ்ஸாவிற்கு செல்லுமாறு அவர் யூரோப்பியன் யூனியனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகம் காஸ்ஸாவை வஞ்சித்துவிட்டன: சர்வதேச மனித உரிமை அமைப்புகள்"

கருத்துரையிடுக