காஸ்ஸா:காஸ்ஸா தாக்குதல் ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் மீண்டுமொரு போருக்கு இஸ்ரேல் தயாராகிக்கொண்டிருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய 22 நாள்கள் அநியாயத்தாக்குதல் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுப்பெற்ற வேளையில் இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் போர் தொடுக்கப்படுவதற்கான செய்திகளைக்கொண்ட துண்டு பிரசுரங்களை வீசியது.
போராளிகளுடன் ஒத்துழைத்தால் ஃபலஸ்தீனர்கள் ஒட்டுமொத்தமாக அதன் பலனை அனுபவிக்கவேண்டி வரும் என கடல் பிரதேசங்களில் வீசப்பட்ட துண்டு பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களும் குழந்தைகளும் உட்பட 1400 க்குமேற்பட்ட ஃபலஸ்தீன் முஸ்லிம்களை கொன்றொழித்ததன் காரணமாக சர்வதேச நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் இஸ்ரேல் மீண்டும் காஸ்ஸாவை தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயிருந்தன.
ஹமாஸ் போராளிகளில் வசமிருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஷாலிதின் விடுதலைக்காக நிர்பந்தத்தின் காரணமாக 1000 ஃபலஸ்தீனர்களை விடுவிக்க ஒத்துக்கொண்ட இஸ்ரேல் கிலாதின் விடுதலைக்குப்பிறகு ஃபலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தும் என்ற சந்தேகம் உள்ளது.
இதற்கிடையே காஸ்ஸா தாக்குதலில் சிவிலியன்களை கொன்றொழிக்க தங்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவு கிடைத்ததாக வாக்குமூலம் அளிக்கும் 30 இஸ்ரேலிய ராணுவவீரர்களின் பேட்டியை பிரேக்கிங் த ஸைலன்ஸ் என்ற மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது. ஃபலஸ்தீனர்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தியதாகவும் 112 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸா:மீண்டும் போர் தொடுக்க இஸ்ரேல் தயாராகிறது"
கருத்துரையிடுக