கொச்சி:கேரளாவில் “லவ் ஜிஹாத்” என்ற இயக்கம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில், "லவ் ஜிஹாத் என்ற பெயரில் இயக்கம் செயல்படுவதாக எந்த தகவலும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை. அமைப்பு ரீதியான மதமாற்றம் ஒன்றும் இங்கு நடைபெறவில்லை. பத்திரிகைகள்தான் லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகின்றன. இதற்கு ஒரு சில காதல் திருமணங்கள்தான் உதாரணமாக காட்டப்படுகின்றன." என்று கூறியுள்ளார்.
பத்தணம்திட்டையில் இரண்டும் எம்.பி.ஏ மாணவிகளை கடத்திச்சென்று மதம் மாற்றியதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் கேரள மாநில உயர்நீதிமன்றம் மாநில காவல்துறைக்கும், மத்திய உளவுத்துறைக்கும் ”லவ் ஜிஹாத்” என்ற இயக்கம் செயல்படுகிறதா என்பதை பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதேவேளையில் கேரள மாநில டி.ஜி.பி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளதாக நீதிபதி கெ.டி.சங்கரன் கூறினார். எல்லா மாநிலங்களிலிருந்தும் உள்துறை செயலளார்களிடமிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மூலமாகவே மத்திய உள்துறை அமைச்சகம் இவ்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "லவ் ஜிஹாத் இயக்கம் இல்லை:மத்திய அரசு திட்டவட்டம்"
கருத்துரையிடுக