வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிற்கு மேலும் 30 ஆயிரம் அமெரிக்க படைவீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் அமெரிக்க படை வருகிற 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து வாபஸ் பெறத் துவங்குமென்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் தன்னுடைய திறமையை நிரூபிக்கவேண்டும் என்றும் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயிக்கு ஒபாமா வேண்டுகோள் விடுத்தார்.
நியூயார்க்கில் வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ஆப்கான்-பாகிஸ்தான் புதிய கொள்கையை பிரகடனம் செய்து உரையாற்றினார் ஒபாமா.பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அல்காயிதாவின் கைகளுக்கு சென்றுவிடாமலிருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உள்ள சூழ்நிலைகளுக்கு அமெரிக்காவின் பாதுக்காப்பில் பங்குண்டு. 2010 துவக்கத்தில் 30 ஆயிரம் படைகள் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்படுவர். 9/11 தாக்குதல் ஆப்கன் பாகிஸ்தான் எல்லையிலிருந்துதான் திட்டமிடப்பட்டது. புதிய தாக்குதல்களுக்கான திட்டமும் இங்கிருந்துதான் தீட்டப்படுகின்றன.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு அல்காயிதா போன்றவை கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன.போர் மற்றும் துயரங்களின் நாள்களை முடிவுக்கு கொண்டுவருவதே தங்களுடைய லட்சியம். ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவது தங்களது நோக்கமில்லை. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பாடுகள் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்களுடைய கூட்டுநாடுகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்வோம். இவ்வாறு ஒபாமா கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கான்:அமெரிக்க ராணுவம் 2011-இல் வாபஸ்- பாரக் ஒபாமா"
கருத்துரையிடுக