காபூல்:அமெரிக்கா எத்தகைய தயாரிப்புகளைச் செய்தாலும் போராட்டக் களத்திலிருந்து பின்வாங்கமாட்டோமென்றும், புதிய தந்திரங்களை கைக்கொள்வோமென்றும் தாலிபான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது தீர்மானத்தின் பலனை அனுபவிக்கும். அதிகமான ராணுவ வீரர்களின் உடல்களை பெறுவதற்கு தயாரகவேண்டிவரும். ராணுவ பலத்தின் மூலம் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுதான் அமெரிக்காவின் நோக்கமென்றால் அது ஒருபோதும் நிறைவேறாது. என தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூஸுஃப் அஹ்மதி எச்சரித்துள்ளார்.
30 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்புவது என்ற ஒபாமாவின் முடிவுக்கெதிராகத்தான் அஹ்மதி இதனை தெரிவித்துள்ளார். இதுவரை 900 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.
௦செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "போராட்டம் தீவிரப்படுத்தப்படும்- தாலிபான்"
கருத்துரையிடுக