சென்னை: சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்ட வரைவில் எந்த ஒரு மதத்திற்கு எதிரான கருத்துக்களும் இடம் பெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாத்திக கருத்துக்களை புகுத்துவதாக இந்து முன்னணி புகார் கூறியிருந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத் திட்ட வரைவு மாணவர்களின் சிந்தனை திறனை வளர்த்து, எதிர்கால சிக்கல்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களையே உள்ளடக்கியுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக உள்ள மதச்சார்பற்ற தன்மையினைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணமும் இறுதி செய்யப்பட்ட பாடத் திட்டத்தில்
இணைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர் வருகை, அவர்களின் ஆட்சி முறை மற்றும் அவைகளின் தாக்கம் ஆகியவை இந்திய வரலாற்றின் ஒரு கூறாகும். இந்த அடிப்படையிலேயே அவற்றைப் பற்றிய பாடங்கள் வரைவுப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில்
பெரியாரின் கருத்துக்கள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு பொதுப் பாடத்திட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்திலும் பெரியார் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது.
பொதுப் பாடத்திட்ட வரைவில் இந்து மதத்திற்குஎதிராகவோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துகளோ இடம் பெறவில்லை என்று
கூறியுள்ளார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "பாட திட்டத்தில் மத கருத்து இல்லை- இந்து முன்னணி புகாருக்கு அமைச்சர் பதில்"
கருத்துரையிடுக