பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை செய்த லிபரன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதம் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் என்று நாடாளுமன்ற நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
லிபரன் அறிக்கையின் இந்தி மொழியாக்கம் வியாழக்கிழமைக்குள் தயாராகிவிடும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக மக்களவை பாரதீய ஜனதா கட்சி துணைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தி மொழியாக்கம் வெள்ளிக் கிழமைக்குள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மக்களவையைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் லிபரன் அறிக்கை மீதான விவாதத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட 17ஆம் ஆண்டு நினைவு நாள் வருவதால், லிபரன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை 6ஆம் தேதிக்குப் பிறகே நடத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.
லிபரன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
source:inneram
0 கருத்துகள்: on "லிபரன் அறிக்கை மீதான விவாதம் டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில்!"
கருத்துரையிடுக