3 டிச., 2009

ஹிந்து பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது- ப.சிதம்பரம்

புதுடெல்லி:ஜிஹாது தீவிரவாதிகளை(?)ப்போல் ஹிந்து தீவிரவாதிகளும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபையில் தெரிவித்தார்.
கடந்த ஒருவருடத்தில் இத்தகைய 12 தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கையில்தான் உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார். முஸ்லிம்-ஹிந்து பயங்கரவாதம் ஒரேபோன்று தவறானது இரண்டையும் இந்த தேசம் சகித்துக்கொள்ளாது. என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

"ஜிஹாது தீவிரவாதமாக" இருந்தாலும் "இந்து தீவிரவாதமாக" இருந்தாலும் அரசு அவற்றை ஒரு போதும் அனுமதிக்காது என்று சிதம்பரம் கூறியதை அடுத்து பிரச்சனை தொடங்கியது.
இந்து தீவிரவாதம் என்று கூறிய சிதம்பரம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை சிதம்பரம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார் என்று பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம், பாஜகவின் குறுக்கீட்டால் கோபமடைந்தார். பாரதீய ஜனதா கட்சியை சமாதானப்படுத்துவதற்காக நான் என்னுடைய வாதத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்னுடைய வாதமெல்லாம், மத அமைப்புகள் - இந்து மத அமைப்பாக இருந்தாலும் அல்லது இஸ்லாமிய மத அமைப்பாக இருந்தாலும் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன என்பதுதான் என்று சிதம்பரம் கூறினார்.

நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையோ, இந்துக்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ குற்றம் சாட்டவில்லை. ஆனால் மதப் பழமைவாதிகள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.
பின்னர் கோபத்திலிருந்து மீண்ட சிதம்பரம், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான விசயம் என்றும் சிதம்பரம் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்து பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது- ப.சிதம்பரம்"

கருத்துரையிடுக