பெங்களூரு: லிபரான் கமிஷன் வெளியிட்ட பாப்ரி மஸ்ஜிதின் தகர்ப்புக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைதுச்செய்து சிறையிலடைக்கவேண்டும் என்றும், பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித்தரப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்றி மதசார்பற்ற இந்தியாவின் கலாச்சாரத்தை பேணிபாதுகாக்க மத்திய அரசு உடனடி தலையிடவேண்டும் என்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைமைச்செயற்குழு விடுத்த அறிக்கையில் கூறியுள்ளது.
சர்வதேச அளவிலும், இந்திய குடிமக்களிடையிலும் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பாப்ரிமஸ்ஜித் தகர்ப்புக்கு இதுதான் பரிகாரமாகும். பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டப்படவேண்டும் என்பதை தவிர வேறு எந்த சமரசத்திற்கும் இந்திய முஸ்லிம்கள் தயாரில்லை என்றும் செயற்குழு கூறியுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் அனைத்து முஸ்லிம் பொதுமக்களும் பங்கெடுக்கவேண்டும். முக்கியமான இப்பிரச்சனையைப்பற்றி பள்ளிவாசல் இமாம்கள் ஜும்ஆ உரைகளில் எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லான உஸ்மான் பேக் ரஷாதி, செயலாளர்களான இஹ்திராமுல் ஹக், அப்துந்நாசர் பாகவி, கரமன அஷ்ரஃப் மவ்லவி, அர்ஷத் முஹம்மது நத்வி, அப்துல்காதிர், எம்.வி.முனீர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் இடித்த இடத்திலேயே கட்டப்பட்டு குற்றவாளிகளை சிறையிலடைக்கவேண்டும்.- இமாம்ஸ் கவுன்சில்"
கருத்துரையிடுக