புதுடெல்லி: பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வில் காங்கிரஸ் கட்சி மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்விதான் மன்னிப்புக்கேட்டார்.
மஸ்ஜித் தகர்க்கப்பட்டது வெட்க்கேடான ஒன்று என்றும், தேசத்திற்கு கேட்டை ஏற்படுத்தக்கூடியது என்பதால் மீண்டும் மன்னிப்புக்கேட்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் சிங்வி கூறினார்.
லிபர்ஹான் கமிசன் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு காங்கிரஸ் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பங்கு பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவியது. நரசிம்மராவை பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றஞ்சாட்டுகின்றீர்களா? என்ற கேள்விக்கு சிங்வி பதிலளிக்கையில், "மூன்று விஷயங்களை கவனிக்கவேண்டும். ஒன்று ராவ் அரசிற்கு மஸ்ஜித் தகர்க்கப்படுவதை தடுக்கமுடியவில்லை. இரண்டு சங்க்பரிவார் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியபிரமாணத்தை மீறியது, மூன்று மஸ்ஜித் பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியை கல்யாண்சிங் பேணவில்லை. மாறாக மஸ்ஜித் தகர்க்கப்பட்டபொழுது கல்யாண்சிங் துள்ளிக்குதித்தார்". இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு: காங்கிரஸ் மீண்டும் மன்னிப்பு"
கருத்துரையிடுக