வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் 30 ஆயிரம் படைவீரர்களை அனுப்புவதை அமெரிக்க ஆளும் மற்றும் எதிர்கட்சி செனட்டர்கள் எதிர்க்கின்றனர்.
படையை அனுப்புவது அவ்வளவு எளிதானதல்ல என்று பாதுகாப்புத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறுகிறார். படையை அனுப்புவதற்கு இன்னும் அதிக காலம் பிடிக்கும் என்றும் 2010 இல் முடியுமா என்பது சந்தேகமே என்று ராணுவ விவகார தலைவர் மைக் முள்ளன் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவத்தை அனுப்புவதில் ஏற்படும் அதிக பொறுப்பும் விவாதத்திற்கிடையானது. ஒபாமா அறிவித்ததை விட ஒரு கோடி டாலர் செலவு அதிகரிக்கும் என்றும் இது வரி செலுத்துவோருக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதாகவும் டெமோக்ரேடிக் உறுப்பினர் ஜோண் பி. மர்த்தா கூறுகிறார்.
அரசியல் சட்டத்திற்குள் நின்றுக்கொண்டு ஒபாமா பிரகடனப்படுத்திய ஆப்கான் கொள்கை புஷ்ஷின் கொள்கைக்கு சற்றும் மாறுபடவில்லை என்று கலிஃபோர்னியாவைச்சார்ந்த குடியரசுக்கட்சியின் உறுப்பினர் தனா ரொஹ்ரா பச்சர் கூறுகிறார்.
ராணுவம் வாபஸ் பெறப்படுவதை எல்லோரும் ஆதரிப்பதாகவும், ஒபாமா அறிவித்த காலக்கெடுவுக்குள் ராணுவத்தை வாபஸ் பெற இயலுமென்றும் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி மக் கிறிஸ்டல் காபூலில் தெரிவித்தார். அதே வேளையில் அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும் என்ற செய்தி நேட்டோ அதிகாரிகளை அற்புதப்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது. இதனை ஆப்கான் தூதர் ரிச்சார்டு ஹோல்புரூக்கிடம் அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஒபாமாவின் ஆப்கான் கொள்கையில் கேட்சுக்கும், ஹிலாரிக்கும் கருத்துவேறுபாடு"
கருத்துரையிடுக