போபால்: விஷ வாயு விபத்து நடைபெற்று 25-வது நினைவு தினத்தில் போபால் நகரத்திலும், சுற்றுப்புற வட்டாரங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.
இவ்விபத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என்று போராட்டங்களில் கலந்துக்கொண்டவர்கள் கூறினர். நூற்றுக்கணக்கான மக்கள் யூனியன் கார்பைடு நிறுவனத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டனர்.
பரக்கத்துல்லா பவனில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாபுலால் கவுர் ஆகியோர் பங்கேற்றனர். விபத்து ஏற்பட்ட நேரத்தை நினைவுகூறும் விதமாக நூற்றுக்கணக்கான மக்கள் முன் தின இரவில் மெழுகுவர்த்தியுடன் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை நோக்கி பேரணி நடத்தினர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் பலவும் போராட்டங்களை நடத்தினர் போராட்டங்கள் நடைபெற்ற இடத்தில் யூனியன் கார்பைடு சி.இ.ஒ வாரன் ஆண்டர்சனின் உருவப்பொம்மை தீ வைத்து கொழுத்தப்பட்டது.
அமெரிக்காவிலிலுள்ள ஆண்டர்சனை கைதுச்செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. விபத்து மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிட்சை பெறுவோரை ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு சென்று சந்தித்து மருந்துகளையும் பழங்களையும் அளித்தனர்.
இவ்விபத்து நடைபெற்று 25 ஆண்டுகள் கழிந்தபிறகும் ஒருவரைக்கூட தண்டிக்காதது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கிடையில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக மஹிளா உத்யோக் என்ற அமைப்பின் கண்வீனர் அப்துல் ஜப்பார் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "போபால் துயரம் நடைபெற்று 25 ஆண்டு நிறைவு: போபாலில் கண்டன போராட்டங்கள்"
கருத்துரையிடுக