5 டிச., 2009

தேஜஸ் பாதிக்கப்பட்டவர்களின் குரல்: அட்மிரல் விஷ்ணு பாகவத்

கோட்டயம்: சிறுபான்மை மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை இந்திய பத்திரிகைகள் காதுக்கொடுத்து கேட்பதில்லை என அட்மிரல் விஷ்ணு பாகவத் கூறினார்.

தேஜஸ் நாளிதழின் கோட்டயம் பதிப்பை துவக்கிவைத்து விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் அவர். கார்பரேட் முதலாளிகளின் கைகளிலிருக்கு பத்திரிகைகள் மக்களின் பக்கம் நிற்பதற்கு தயங்குகின்றன. அதிகமான விவசாயிகளின் தற்கொலையையும், இந்தியாவில் ஏழைகளான குழந்தைகள் பட்டினியாலும், நோயாலும் சாவதையும் கண்டுக்கொள்ளாமல் அல்காயிதா பற்றியும் தீவிரவாத்தையும் பற்றியும்தான் அவர்கள் செய்தி வெளியிடுகின்றனர்.

சி.ஐ.ஏ வும் ஆட்சிபீடங்களும் அவிழ்த்துவிடும் தீவிரவாதச் செயல்களுக்கு பின்னால் செல்லும் பத்திரிகைகள் மக்களுடைய பிரச்சனைகளை கண்டுக்கொள்வதே இல்லை.

உலகமயமாக்கலின் புதிய தாராளமயமாக்கல் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஆட்சியாளர்களுடன் இணைந்து பாசிச போக்கிலான பிரச்சாரங்களை பத்திரிகைகள் மேற்க்கொண்டு வருகின்றன. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாத பத்திரிகைகளிடமிருந்து மூடி மறைக்கப்பட்ட அரசின் கொள்கைகள்தான் இந்த நாட்டில் பொதுமக்களை தற்கொலையின் பக்கமும், பட்டினியின் பக்கமும் அழைத்துச்செல்கின்றன. இதையொன்றும் செய்தியாக்காத பத்திரிகைகள் ஆட்சிபீடங்கள் உபாயம்(sponsor) செய்யும் பயங்கரவாதத்திற்கு பின்னால் செல்கின்றன.
மக்களின் எதிர்ப்புப்போராட்டத்தையும் கண்டும் காணாமல் இருக்கும் பத்திரிகைகள் ஆட்சிபீடங்கள் உபாயமான(sponsored) தீவிரவாதிகளின் கதைகளை மட்டும் பிரசுரிக்கின்றன.
மக்களுக்காக மக்களின் குரலாய் மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பத்திரிகைதான் தேஜஸ் என்று பாகவத் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பத்திரிகையை ஏற்படுத்தவேண்டும் என்பது எனது கனவாகயிருந்தது. அதனை தேஜஸ் நிறைவேற்றியிருக்கிறது. கேரள மாநிலத்தின் வெளியிலிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் தேஜஸின் பாதையை பின் தொடர்ந்து மக்களுடன் கைகோர்க்கும் பத்திரிகை கலாச்சாரம் வளரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இவ்வாறு அட்மிரல் விஷ்ணு பாகவத் உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தேஜஸ் பாதிக்கப்பட்டவர்களின் குரல்: அட்மிரல் விஷ்ணு பாகவத்"

கருத்துரையிடுக