ஸ்ரீநகர்: ஹுரியத் மாநாட்டுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஃபஸல் ஹக் குரைஷி மீது நட்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவருடைய தலையில் குண்டுபாய்ந்ததால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வேளையில் ஸவ்ராவிலிலுள்ள மஸ்ஜிதிலிருந்து வெளியேறும்போது அக்கிரமக்காரர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் கூறுகிறது.
65 வயதான குரைஷி உடனே சவ்ரா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிதவாத ஹுரியத் தலைவராக கருதப்படும் குரைஷிதான் 2000-ஆம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு முயற்சியை மேற்க்கொண்டார். அப்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டதற்கு அதனை மறுத்துவிட்டார் குரைஷி என போலீஸ் கூறுகிறது.
கஷ்மீர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளை தகர்ப்பதற்கே இந்த துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் என கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கண்டித்தார். மேலும் இச்சம்பவத்தை மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லாஹ், சி.பி.எம் தலைவர் முஹம்மது யூசுஃப் தரிகாமி ஆகியோரும் கண்டித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீர்: ஹுரியத் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு"
கருத்துரையிடுக