அஜ்மீர்/மணாலி: இந்தியாவில் தீவிரவாதத்தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கருதப்பட்டு கைதுச்செய்யப்பட்டுள்ள டேவிட் கோல்மன் ஹெட்லி அஜ்மீரில் புஷூர் ஹோட்டலில் இரண்டு தினங்கள் வசித்ததாக தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு தகவல் கிடைத்துள்ளது.
யூத பிரார்த்தனை மையத்தின் எதிர் திசையிலிலுள்ள ஹோட்டல் அறையில்தான் ஹெட்லி வசித்துள்ளார். யூதனான தனக்கு யூத பிரார்த்தனை மையத்தின் பரிசுத்தமான காட்சியை காண்பதற்கு அந்த அறைதான் வேண்டும் என்று ஹெட்லி பிடிவாதம் பிடித்ததாக ஹோட்டல் பணியாளர்கள் புலனாய்வு ஏஜன்சிக்கு தகவல் அளித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹெட்லி அஜ்மீரில் யூத மையத்தின் அருகில் வசித்ததாக தகவல்"
கருத்துரையிடுக