நாகர்கோவில் டிச.5: பாபர் மசூதி இடித்தது குறித்து நீதிபதி லிபரான் தலை மையில் விசாரணை ஆணையம் போடப்பட்டது. லிபரான் அறிக்கை ஜுன் 30ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ தலைவர் கள் உள்பட 68 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைவர் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் பைசல் அஹமது தலைமை வகித்தார். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது அலி முன்னிலை வகித்தார். ஜின்னா செய்யது, பாப்புலர் ப்ரண்ட் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் காஜா நன்றி கூறினார்.
source:Dinakaran
0 கருத்துகள்: on "லிபரான் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்"
கருத்துரையிடுக