லண்டன்: பாகிஸ்தான் ஒன்றும் அமெரிக்கா, இங்கிலாந்தின் அடிமைகள் அல்ல. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் நாங்களும் சம அந்தஸ்திலான நாடுதான் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.
இதுகுறித்து தி டைம்ஸ் இதழுக்கு கிலானி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவுக்காக நாங்கள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரில் ஈடுபடவில்லை. எங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் எங்களுக்காக போரிட்டு வருகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுடன், சம அந்தஸ்திலான நாடுதான் பாகிஸ்தான்.அமெரிக்கா அல்லது இங்கிலாந்தின் அடிமைகள் அல்ல நாங்கள்.
ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் மறைந்திருப்பதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுவது தவறான தகவல். அதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். நிச்சயமாக பின்லேடன் எங்களது நாட்டுக்குள் இல்லை.2008ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்றார் கிலானி.
source:thatstamil
0 கருத்துகள்: on "நாங்கள் யுஎஸ்-யுகே அடிமைகள் அல்ல- பாகி்ஸ்தான்"
கருத்துரையிடுக