வாஷிங்டன்:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாப்ரி மஸ்ஜிதை தகர்த்த குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டுமென்று அமெரிக்க இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்ற முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதியை பேண அரசு தயாராகவேண்டும் என்றும் இக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சங்க்பரிவார்கள்தான் பாப்ரியை தகர்த்தது என்று நீதிபதி லிபர்ஹான் கண்டறிந்துள்ளார். 68 பேருக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மதவெறி கும்பல்களுக்கு அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்களிடமிருந்து போதிய நிதி பட்டுவாடாச்செய்யப்படுகிறது என்று கூட்டமைப்பின் தலைவர் ரஷீத் அஹ்மத் கூறினார்.
லிபர்ஹான் கமிஷன் உபதேசித்தவாறு அரசியலில் கிரிமினல்மயமாக்கத்தை தடைச்செய்வதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமென்று எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பின் தேசிய துணைத்தலைவர் டாக்டர்.ஹைதர் கான் கூறினார்.
லிபர்ஹான் கமிஷன் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் 68 பேருக்கு பிரிட்டனில் நுழைய தடை ஏற்படுத்தப்படவேண்டுமென்று பிரிட்டீஷ் இந்தியன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் முஹம்மது முனாஃப் சினா வலியுறுத்தினார்.
குற்றவாளிகளை விசாரணைச்செய்யவும், பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களுக்கு அளிக்கவும் அரசு காலம் தாழ்த்தக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜிதை தகர்த்த கிரிமினல்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும்: அமெரிக்க இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்"
கருத்துரையிடுக