வாஷிங்டன்:அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடன் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ரோபர்ட் கேட்ஸ் கூறுகிறார்.
உஸாமா பின் லேடன் எங்கிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரியாது. தெரிந்திருக்குமானால் நாங்கள் அவரை பிடித்திருப்போமே என்று ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கேட்ஸ் இதனை தெரிவித்தார்.
அல்காயிதா தலைவரை பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து எட்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்த வேளையில்தான் கேட்ஸ் இதனை தெரிவிக்கின்றார். பல வருடங்களாக உஸாமாவைக் குறித்து எந்தவொரு விபரமும் கிடைக்கவில்லை என்றும் கேட்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத்தின் கைக்கு எட்டும் தூரத்தில் தோராபோரா மலை இடுக்குகளில் உஸாமாவை கண்டபிறகும் அவர் தப்பிச்செல்ல அனுமதித்ததாக சமீபத்தில் வெளிவந்த செனட் அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையில் பின் லேடன் பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் கூறுகிறது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அல்காயிதா தலைவர் பின் லேடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று சூழுரைத்து தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தார். ஆனால் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி ஆப்கான் குடிமக்களை கொன்றதுதான் மிச்சமேதவிர அமெரிக்காவால் வேறொன்றும் சாதிக்க இயலவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பின்லேடன் எங்கே?- தெரியாது என்கிறார் கேட்ஸ்"
கருத்துரையிடுக