
உடனே விரைந்து வந்த துணை தாசில்தார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் முதலியார்பட்டி பள்ளிவாசல் வடக்குத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீத் என்ற கோயா என்பவரின் மனைவி கதிஜாபேகம் தான் கொலை செய்யப் பட்ட பெண் என்பது தெரிய வந்துள்ளது . கதிஜாபேகம் குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு குளத்துக்கு சென்றுள்ளார்.
தடயவியல் நிபுணர் விஸ்வா மொன்னா முஹம்மது மற்றும் அதிகாரிகள் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். நகைக்காக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என கருதப் படுகிறது. கதிஜா பேகத்தின் கழுத்து பகுதியில் பலமான கத்திக்குத்து காயம் இருந்தது. கொலைக்கான காரணம் தெரிய வில்லை. காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கதிஜா பேகத்தின் கணவர் சாகுல் ஹமீத் ஆந்திர மாநிலத்தில் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
source:inneram
0 கருத்துகள்: on "குளத்தில் குளிக்க சென்ற பெண் குத்தி கொலை"
கருத்துரையிடுக