11 டிச., 2009

போரை நியாயப்படுத்தி சமாதானத்திற்கான நோபலை பெற்றார் ஒபாமா

ஓஸ்லோ:போரை நியாயப்படுத்தி சமாதானத்திற்கான நோபல் பரிசை ஒபாமா பெற்றுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் போரை வலுப்படுத்த 30 ஆயிரம் படையினரை ஆப்கானுக்கு அனுப்பி சில தினங்கள் கழிந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசை பெற்றது ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஒன்றாகும்.


பரிசை பெற்றுக்கொண்டு உரையைத்துவங்கிய ஒபாமா மார்டின் லூதர் கிங்கையும், மகாத்மா காந்தியையும் நினைவுக்கூர்ந்தார்.


பின்னர் ஒபாமா கூறியதாவது. "ஆப்கானிஸ்தானிற்கு மீண்டும் ராணுவத்தை அனுப்புவதற்கான தனது தீர்மானத்தை காலம் நியாயப்படுத்தும். அமெரிக்காவையும், உலகத்தையும் பாதுகாக்க மார்டின் லூதர் கிங்குடைய காந்தியுடைய கொள்கைகள் மட்டும் போதாது. அதுமாத்திரம் கொண்டு வன்முறைகளை இல்லாமலாக்க முடியாது என்ற எதார்த்தமான உண்மையை நாம் சம்மதிக்கவேண்டும். வன்முறைகளை அழித்தொழிக்க பலம் பிரயோகிப்பதை தார்மீகமான முறையில் நியாயப்படுத்தும் காலக்கட்டம் வந்தே தீரும்.

நான் இவ்விருதை மிகுந்த தாழ்மையோடு பணிவன்புடனும் காண்கிறேன். நான் இவ்விருதை வாங்கும்பொழுது எனக்கு சுற்றுமுள்ள மிகவும் பெரிய பிரச்சனை இரண்டு போருக்கு இடையில் சிக்கிய ஒரு நாட்டின் கமாண்டர் நான் என்பதுதான். நீங்கள் எடுத்த இந்த தீர்மானம் ஏற்படுத்திய விவாதங்களை கவனத்திற்மேற்கொண்டிருந்தால் நான் உதாசீனப்படுத்தப்பட்டிருப்பேன். காரணம் இவ்விருதை பெற்ற முன்னோர்களுடன் என்னை ஒப்பீடுச்செய்தால் நான் சாதித்தது மிகவும் குறைவு." இவ்வாறு ஒபாமா கூறினார்.


தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போரை நியாயப்படுத்தி சமாதானத்திற்கான நோபலை பெற்றார் ஒபாமா"

கருத்துரையிடுக