31 டிச., 2009

ஆப்கானில் பள்ளிக்குழந்தைகளை கொன்றது நேட்டோ படையினர்:புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது

காபூல்:ஆப்கானிஸ்தான் கிராமமொன்றில் பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரைக் கொன்றது நேட்டோ படையினர் என்று அரசு புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குனார் மகாணத்தில் நராங்க் மாவட்டத்தில் தாக்குதல் நடந்தது.12 வயதிற்கும் 14 வயதிற்குமிடைப்பட்ட பள்ளிக் குழந்தைகள்தான் மரணித்தவர்களில் அதிகம்பேர்.
இச்சம்பவத்தில் ஆக்கிரமிப்புப்படையினரின் பங்கைக்குறித்து விசாரிக்க அதிபர் ஹமீத் கர்ஸாயி ஆலோசகர் அஸருல்லாஹ் வஃபாவின் தலைமையில் புலனாய்வுக்கமிட்டியை நியமித்தார்.நேட்டோ படையினருக்கு எதிராக இம்மாகாணத்தில் பரவலான கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானில் பள்ளிக்குழந்தைகளை கொன்றது நேட்டோ படையினர்:புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது"

கருத்துரையிடுக