
அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு தாலிபான் தலைவர்கள் தன்னை அணுகியதாகவும் இம்ரான் கான் கூறினார். இவ்விஷயத்தில் அரசின் பதிலைப் பொறுத்தே தலையிடமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இதுபோன்றதொரு வாக்குறுதியை இம்ரான் கான் முன்வைத்தபோதும் அரசு அதற்கு அனுமதியளிக்கவில்லை. தாலிபான்களுக்கெதிரான நடவடிக்கை என்ற பெயரில் பழங்குடியினர் பகுதிகளில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதை இம்ரான் கானின் கட்சி எதிர்க்கிறது. இதனால் தாலிபான் ஆதரவாளர் என்ற முத்திரையும் இம்ரான் கான் மீது சாட்டப்படுகிறது. இம்ரான் கானின் இவ்வறிவிப்பை தெஹ்ரீக்-எ-தாலிபான் வரவேற்றுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தாலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்பட தயார் - இம்ரான்கான்"
கருத்துரையிடுக