
கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க விமானத்தை நடுவானில் வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க முற்பட்ட நைஜீரிய இளைஞரின் இந்த சதிச் செயல் முறியடிக்கப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இச்சம்பவத்தை மேற்கொண்ட அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த இந்த இளைஞரிடம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து முதல் முறையாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் ஒபாமா உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தற்போது இச்சம்பவம் குறித்து விவர அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அதாவது டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று புலனாய்வுத் துறைக்குக் கட்டளையிட்டுள்ளார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிந்திருந்தும் அதை விமான பாதுகாப்பு துறையுடன் பகிர்ந்து கொள்ளாதது தெரியவந்துள்ளது. முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் இச்சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். நைஜீரிய தீவிரவாதியின் தாக்குதல் குறித்து சிஐஏ புலனாய்வுத்துறைக்குத் தெரிந்துள்ளது. ஆனால் அந்தத் தகவல் பிற பாதுகாப்பு அமைப்புகளிடம் தெரிவிக்கப்படவில்லை. புலனாய்வு அமைப்புக்குத் தகவல் தெரிந்திருந்து, அதை பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தெரிவிக்காதது என்பது தொடர் தோல்வியைத்தான் காட்டுகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
பயங்கரவாதி ஒருவன், வெடிப்பொருளுடன் விமானத்தில் பயணம் செய்ய முடிவதோடு பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியும் என்றால் அத்தகைய சதிச் செயலை எவ்விதம் ஏற்றுக் கொள்ள முடியும். நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அளிக்க உள்ள விவர அறிக்கையில் முழு விவரமும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் புலனாய்வு அமைப்பிடம் கோபமாகக் கூறியுள்ளார் ஒபாமா.
இந்தச் சம்பவம் நமக்கு ஒரு படிப்பினை. நமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள கோளாறுகளால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே புலனாய்வு அமைப்புகள் தீவிரவாதிகள் பட்டியலை வெளியிடுவதோடு அவற்றை விமான நிலையங்களில் வைத்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்னையை உடனடியாக ஆராய்ந்து உடனடியாகத் தீர்வுகாண வேண்டியது மிகவும் அவசியம் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள நைஜீரிய இளைஞர் உமர் ஃபரூக் அப்துல் முத்தலிப்பின் தந்தையிடம் சிஐஏ அதிகாரிகள்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
inneram
2 கருத்துகள்: on "சிஐஏ க்கு தொடர் தோல்வி: அதிபர் ஒபாமா"
i thing he is mad
please stop the words. தீவிரவாதி என்ற பதத்தை பயன் படுத்த வேண்டாம். போராளிகளை பார்த்து ஏன் தீவிரவாதிகள் என்ற பதம் பயன்படுத்தி நியூஸ் போடுகிறீர்கள். what happaned you.
கருத்துரையிடுக