31 டிச., 2009

சிஐஏ க்கு தொடர் தோல்வி: அதிபர் ஒபாமா

வாஷிங்​டன்: அமெ​ரிக்க புல​னாய்வு அமைப்​பான சிஐஏ மீது கோப​மும் அதி​ருப்​தி​யும் கொண்ட ஒபாமா இனி எதிர்​கா​லத்​தில் இது​போன்ற செயல்​கள் நடை​பெற ஒரு​போ​தும் அனு​ம​திக்க முடி​யாது என்று குறிப்​பிட்​டுள்​ளார்.​ அமெ​ரிக்க விமா​னத்தை அல்-​காய்தா தீவி​ர​வாதி தகர்க்க முயன்ற சம்​ப​வம் புல​னாய்வு அமைப்​பின் தொடர் தோல்​வி​யைக் காட்​டு​கி​றது என்று அமெ​ரிக்க அதி​பர் பராக் ஒபாமா குறிப்​பிட்​டுள்​ளார்.​

கடந்த வாரம் கிறிஸ்​து​மஸ் தினத்​தன்று அமெ​ரிக்க விமா​னத்தை நடு​வா​னில் வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க முற்​பட்​ட நைஜீ​ரிய இளை​ஞரின் ​ இந்த சதிச் செயல் முறி​ய​டிக்​கப்​பட்டு விமா​னம் பத்​தி​ர​மாக தரை​யி​றங்​கி​யது.​ இச்​சம்​ப​வத்தை மேற்​கொண்ட அல்-​காய்தா அமைப்​பைச் சேர்ந்த இந்த இளை​ஞ​ரி​டம் அமெ​ரிக்க புல​னாய்வு அமைப்பு விசா​ரணை நடத்தி வரு​கி​றது.​ இச்​சம்​ப​வம் குறித்து முதல் முறை​யாக நாட்டு மக்​க​ளி​டம் தொலைக்​காட்சி மூலம் ஒபாமா உரை​யாற்​றி​னார்.​ அதைத் தொடர்ந்து தற்​போது இச்​சம்​ப​வம் குறித்து விவர அறிக்​கையை ஒரு வாரத்​திற்​குள் அதா​வது டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய வேண்​டும் என்று புல​னாய்​வுத் துறைக்​குக் கட்​ட​ளை​யிட்​டுள்​ளார்.​

அமெ​ரிக்க புல​னாய்வு அமைப்​புக்கு தக​வல் தெரிந்​தி​ருந்​தும் அதை விமான பாது​காப்பு துறை​யு​டன் பகிர்ந்து கொள்​ளா​தது தெரி​ய​வந்​துள்​ளது.​ முன்​கூட்​டியே தக​வல் தெரி​வித்​தி​ருந்​தால் இச்​சம்​ப​வத்​தைத் தவிர்த்​தி​ருக்கலாம்.​ நைஜீ​ரிய தீவி​ர​வா​தி​யின் தாக்​கு​தல் குறித்து சிஐஏ புல​னாய்​வுத்​து​றைக்​குத் தெரிந்​துள்​ளது.​ ஆனால் அந்​தத் தக​வல் பிற பாது​காப்பு அமைப்​பு​க​ளி​டம் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ ​புல​னாய்வு அமைப்​புக்​குத் தக​வல் தெரிந்​தி​ருந்து,​​ அதை பாது​காப்பு அமைப்​பு​க​ளுக்​குத் தெரி​விக்​கா​தது என்​பது தொடர் தோல்​வி​யைத்​தான் காட்​டு​கி​றது.​ இதை ஒரு​போ​தும் ஏற்​றுக் கொள்​ளவே முடி​யாது.​

பயங்​க​ர​வாதி ஒரு​வன்,​​ வெடிப்​பொ​ரு​ளு​டன் விமா​னத்​தில் பய​ணம் செய்ய முடி​வ​தோடு பய​ணி​க​ளின் உயி​ருக்​கும் அச்​சு​றுத்​தல் ஏற்​ப​டுத்த முடி​யும் என்​றால் அத்​த​கைய சதிச் செயலை எவ்​வி​தம் ஏற்​றுக் கொள்ள முடி​யும்.​ ​ நியூ​யார்க் நக​ரில் இரட்​டைக் கோபு​ரம் தகர்க்​கப்​பட்ட சம்​ப​வத்​துக்​குப் பிறகு பாது​காப்பு ஏற்​பா​டு​கள் முழு​வீச்​சில் வலுப்​ப​டுத்​தப்​பட்​டுள்​ள​தாக நினைக்​கும் வேளை​யில் இந்த சம்​ப​வம் ​ நிகழ்ந்​துள்​ளது,​​ புல​னாய்வு மற்​றும் பாது​காப்பு அமைப்​பு​க​ளின் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.​ இது தொடர்​பாக அளிக்க உள்ள விவர அறிக்​கை​யில் முழு விவ​ர​மும் தெரி​விக்​கப்​பட வேண்​டும் என்​றும் புல​னாய்வு அமைப்​பி​டம் கோப​மா​கக் கூறி​யுள்​ளார் ஒபாமா.​
இந்​தச் சம்​ப​வம் நமக்கு ஒரு படிப்​பினை.​ நமது பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளில் உள்ள கோளா​று​க​ளால் பய​ணி​க​ளின் பாது​காப்பு கேள்​விக்​கு​றி​யா​கி​யுள்​ளது.​ எனவே புல​னாய்வு அமைப்​பு​கள் தீவி​ர​வா​தி​கள் பட்​டி​யலை வெளி​யி​டு​வ​தோடு அவற்றை விமான நிலை​யங்​க​ளில் வைத்து கண்​கா​ணிக்க வேண்​டி​யது அவ​சி​ய​மா​கி​யுள்​ளது என்று குறிப்​பிட்​டுள்​ளார்.​ ​இந்​தப் பிரச்​னையை உட​ன​டி​யாக ஆராய்ந்து உட​ன​டி​யா​கத் தீர்​வு​காண வேண்​டி​யது மிக​வும் அவ​சி​யம் என்​றும் ஒபாமா தெரி​வித்​துள்​ளார்.​இத​னி​டையே கைது செய்​யப்​பட்​டுள்ள நைஜீ​ரிய இளை​ஞர் உமர் ஃப​ரூக் அப்​துல் முத்த​லிப்​பின் தந்​தை​யி​டம் சிஐஏ அதி​கா​ரி​கள்தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.
inneram​ ​

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "சிஐஏ க்கு தொடர் தோல்வி: அதிபர் ஒபாமா"

பெயரில்லா சொன்னது…

please stop the words. தீவிரவாதி என்ற பதத்தை பயன் படுத்த வேண்டாம். போராளிகளை பார்த்து ஏன் தீவிரவாதிகள் என்ற பதம் பயன்படுத்தி நியூஸ் போடுகிறீர்கள். what happaned you.

கருத்துரையிடுக