தம்மாம்: பெருநாள் கொண்டாட்டங்களிலிருந்து சற்று வித்தியாசமான முறையில் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்தியம்பும் ஈத் மிலன் நிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது.
மாற்றுமத நண்பர்களுக்கு விருந்தளித்து இஸ்லாத்தையும் எடுத்துக்கூறும் இந்நிகழ்ச்சி சவூதி அரேபியாவில் தம்மாம் நகரில் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் தமிழ்நாடு சார்பாக சிறப்புடன் நடைபெற்றது. பாரகன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
ஏர்வாடியைச்சார்ந்த சகோதரர் ரியாஸ் தலைமை வகித்தார். அல்ஸாமில் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பொறியாளரும் பத்திரிகையாளருமான பால சுப்ரமணியம் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். தான் புரிந்துக்கொண்ட இஸ்லாம் என்ற தலைப்பில் அவர் தனது இஸ்லாம் பற்றிய கருத்துகளை மக்களோடு பகிர்ந்துக்கொண்டார்.
அல்கோபார் இஸ்லாமிக் தஃவா சென்டர் தமிழ் பிரிவு பிரச்சாரகர் மவ்லவி.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்றோரின் கேள்விகளுக்கு சென்னையைச்சார்ந்த பொறியாளர். ஜக்கரியா பதிலளித்தார்.
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் தமிழ்நாடு தலைவர் முஹம்மது ஃபைஸல் முக்கிய விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசை வழங்கினார். சிறந்த கேள்வியை கேட்டவருக்கான பரிசையும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கான பரிசையும் நாகர்கோவிலைச்சார்ந்த சாதிக் மீரானும், இலங்கையைச்சார்ந்த மவ்லவி உவைசியும் வழங்கினர்.
வெறும் கொண்டாட்டங்களைவிட மாற்றுமதத்தவர்களின் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றி அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்தியம்பும் அழகிய நிகழ்ச்சிதான் "ஈத்மிலன்" என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கடையநல்லூர் திப்புசுல்தான் கூறினார்.
நிகழ்ச்சியில் ஹாஜா குத்புத்தீன் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார். ஆஷிக் குளச்சல் வரவேற்புரை நிகழ்த்தினார். ஹம்ஸா நன்றி நவின்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தம்மாமில் சிறப்புடன் நடைபெற்ற ஈத்மிலன்"
கருத்துரையிடுக