புதுடெல்லி: தேஜஸ் மலையாள நாளிதழை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திலிருந்து கேரள அரசுஸ் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் பற்றி தங்களுக்கு தெரியாது என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். நாங்கள் இத்தகைய ஒரு அறிக்கையை பார்க்கவுமில்லை, கேரள அரசிடம் இது சம்பந்தமாக நடவடிக்கையெடுக்க உத்தரவிடவுமில்லை என உள்துறை அமைச்சகத்தை சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
தேஜஸின் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் எந்தவொரு எண்ணமும் தங்களுக்கில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்தியாவுடன் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணி குறித்தும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தும் தேஜஸ் நாளிதழும், மாதமிருமுறை இதழும் அரசின் நிலைப்பாட்டிற்கெதிராக செய்தி வெளியிடுவதாகவும் எனவே அதனை கண்காணித்து நடவடிக்கையெடுக்கக் கோரிய கடிதம் ஒன்றை உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு இயக்குநர் ஒய்.கெ.பவேஜா கேரள முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் அக்கடிதத்தில் கஷ்மீர் போராளி இயக்கங்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளை அரச பயங்கரவாதமாக சித்தரித்து அவற்றை நியாயப்படுத்துவதாகவும், சமுதாய திட்டங்கள் அடங்கிய தலையங்கமும், கட்டுரைகளும் வெளியிடுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஆனால் தற்ப்போது இக்கடிதம் தாங்கள் எழுதவில்லை என உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஒரு வேளை கடிதம் வந்தது உண்மையானால் அது முதன்மை அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த யாரோ எழுதியிருக்க வாய்ப்புள்ளது என்றும் அதனைக்குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தேஜஸ் பத்திரிகைக்கு எதிரான கடிதம், எங்கிருந்து வந்தது? என்பதைப்பற்றி விசாரிக்கப்படும்- உள்துறை அமைச்சகம்"
கருத்துரையிடுக