ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் உலகின் இதர பகுதிகளை போல் லிட்டரில் விற்கப்படாமல் கேலனில் விற்கப்படுகிறது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி பெட்ரோல் லிட்டரிலேயே விற்கப்படும்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கேலனிலிருந்து லிட்டருக்கு மாற 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பினும் இப்போதே சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் லிட்டரில் பெட்ரோலை விற்க ஆரம்பித்து விட்டன. ஒரு கேலன் சுமார் 4.5 லிட்டருக்கு ஒப்பானதாகும்.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்க அதிகாரி முஹம்மது ஸலேஹ் பத்ரி கூறும் போது உலகின் இதர பகுதிகளை போல் ஓரே அளவுகோலை கொண்டு வரும் நோக்கிலேயே இம்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
source:inneram
0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரகத்திலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேலன்களுக்கு பிரியாவிடை"
கருத்துரையிடுக