மும்பை: பார்சிலோனாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சதித் திட்ட வழக்கில் ஒரு இந்தியத் தொழிலதிபருக்கும், 10 பாகிஸ்தானியர்களுக்கும் எட்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இந்தியர் பெயர் ரோஷன் ஜமால் கான். பார்சிலோனா மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் ஜமால் கான் அப்பாவி, ஆஸ்திரேலியாவில் முன்பு டாக்டர் முகம்மது ஹனீப் தவறாக கைது செய்யப்பட்டதைப் போல தற்போது ஜமால் கான் கைது செயயப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாக ஜமால் கானின் குடும்பத்தினரும், நண்பர்களும் கூறியுள்ளனர்.
ஜமால் கானின் சகோதரர் மகபூப் கான் கூறுகையில், டாக்டர் ஹனீப்பைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசு பின்னர் அதற்காக மன்னிப்பு கோரிது. அதேபோல ஸ்பெயின் அதிகாரிகள் ரோஷனை தவறான வழக்கில் சேர்த்துள்ளனர்.
இந்தக் கைது, தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளோம். இதற்கான நடவடிக்கையை எங்களது வழக்கறிஞர் சேல்ஸ் செய்து வருகிறார் என்றார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "ஸ்பெயினில் குண்டு வைக்க சதி செய்ததாக கூறி இந்தியருக்கு சிறைத் தண்டனை"
கருத்துரையிடுக