டெல்அவீவ்:ஹமாஸின் வசமுள்ள இஸ்ரேல் ராணுவ வீரன் கிலாத் ஷாலிதிற்கு பகரமாக 1000 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரேல் அங்கீகரித்தது.
நேற்று பிரதமர் நெதன்யாகு அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஐந்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியபிறகு இவ்வொப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
விடுதலைச் செய்யப்படும் ஃபலஸ்தீன கைதிகளின் பட்டியலை தயார் செய்வதற்கு பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
இஸ்ரேலின் தீர்மானம் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த மத்தியஸ்தரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹமாஸிடம் தெரிவிக்கப்பட்டவுடன் கைதிகள் பரிமாற்றம் உடனடியாக நிறைவேறும்.
இஸ்ரேலிய ராணுவ வீரன் ஷாலிதின் விடுவிப்பதற்கான செய்தியை அவருடைய தாயார் அவீவ ஷாலித் வரவேற்றார். அதே வேளையில் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் வரை காத்திருப்பதாக அவருடைய தந்தை நோம் ஷாலித் தெரிவித்தார்.
ஃபலஸ்தீனர்களை விடுதலைச்செய்வதற்கு அமைச்சர்கள் தெரிவித்தபொழுது விடுதலைக்கு பிறகு 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்கு சட்டமிருப்பதாக நெதன்யாகு சுட்டிக்காட்டினார். ஷாலிதின் விடுதலை அரசின் பொறுப்பென்றும் அதனை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு ஷாலிதின் விடுதலைக்காக எகிப்து சமாதான முயற்சியை மேற்க்கொண்டது. ஆனால் அது தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஜெர்மனி களத்திலிறங்கியது. ஏற்கனவே ஹிஸ்புல்லாஹ்-இஸ்ரேல் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின் போதும் ஜெர்மனி நடுவராக செயல்பட்டது. ஷாலிதை இஸ்ரேலிடம் அளிக்கும்பொழுது 450 ஃபலஸ்தீனர்களையும், ஷாலித் இஸ்ரேலுக்குச்சென்றபிறகு மீதமுள்ள ஃபலஸ்தீனர்களையும் விடுதலைச்செய்வதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம். ஷாலிதின் வீடியோவை அளித்ததற்கு 20 பெண் ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருந்தது.
அதேவேளையில் கைதிகள் பரிமாற்றம் முடிந்தபிறகு காஸ்ஸா மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில் கைதிகள் பரிமாற்றம் முடிந்தபிறகு காஸ்ஸா மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிறைக்கைதிகள் பரிமாற்றம் அங்கீகரித்தது இஸ்ரேல்"
கருத்துரையிடுக