லண்டன்:சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பின் தலைமை பீடத்தில் இந்தியர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
பெங்களூரைச் சார்ந்த ஸலீல் ஷெட்டியை அடுத்த பொதுச் செயலாளராக ஆம்னெஸ்டி நியமித்துள்ளது.
தலித் வாய்ஸ் என்ற பத்திரிகையின் எடிட்டர் வி.டி.ராஜசேகரின் மகன் தான் ஸலீல் ஷெட்டி. கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா வின் மில்லியனியம் கேம்பய்ன் இயக்குநராக செயல்படும் ஷெட்டி ஏழ்மையை போக்குவதற்காக செயல்படும் ஆக்ஸன் எய்ட் என்ற அமைப்பின் சீஃப் எக்ஸிகியூடிவாக செயல்படுகிறார். எட்டுவருட சேவைக்கு பிறகு பதவி விலகும் ஐரின் கானிற்கு பதிலாகத்தான் ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
2010 ஜுன் மாதம் ஷெட்டி பதவியேற்பார். அஹ்மதாபாத் ஐ.ஐ.எம்மிலிருந்து எம்.பி.ஏ பட்டம்பெற்ற ஷெட்டி லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்ணாமிக்ஸிலிருந்து பொருளாதாரத்திற்கான முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். 1985 முதல் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆக்ஸன் எய்ட் என்ற நிறுவனத்தின் கென்யா நாட்டின் இயக்குநராக செயல்பட்டார். 1998 வரை இப்பதவி வகித்த ஷெட்டி 2003 ஆம் ஆண்டில் அன்றைய ஐ.நா.பொதுச் செயலாளரான கோஃபி அன்னனின் முயற்சியில் உருவாக்கப்பட்ட மில்லியனியம் விரிவாக்கத் திட்டத்தின் கேம்பய்ன் இயக்குநராக பொறுப்பேற்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் சர்வதேச மனித உரிமை அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளராக வி.டி.ராஜசேகரின் மகன் ஸலீல் ஷெட்டி தேர்வு"
கருத்துரையிடுக