வாஷிங்டன்:போரின் பெயரால் தனியார்த் துறைக்கு ஆப்கானிலும், ஈராக்கிலும் கோடிக்கணக்கான டாலரை செலவழிக்கும் ஒபாமா அரசிற்கு பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோரில் பெரும்பாலோர் தனியார்த்துறையச் சார்ந்தவர்கள். இதில் ப்ளாக்வாட்டரும் உட்படும். இவர்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை அமெரிக்க அரசு வீண்விரயம் செய்வதாக பென்டகனின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தனியார்துறையிலிருந்து 60 சதவீதத்திற்கும் அதிகமான பேர் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றுவதாக அவ்வறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் 26 ஆயிரம் முதல் 56 ஆயிரம் வரையிலான ஒப்பந்தத் தொழிலாளர்களை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கருதுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.
தற்ப்போது பென்டகனின் கட்டுப்பாட்டில் 1,04,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆப்கானில் பணியாற்றுகின்றனர். 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அதிகமாக ஆப்கானிற்கு அனுப்புவதான ஒபாமாவின் திட்டத்தினால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு இதுவரை 23 ஆயிரம் கோடி டாலர் செலவானதாகவும், 2010 ஆம் ஆண்டில் 7 ஆயிரம் கோடி டாலர் செலவழிக்கும்பொழுது இது 30 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று கூறும் பென்டகனின் அறிக்கை ஆப்கானிஸ்தானில் செயல்படும் அமெரிக்க ராணுவத்திற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு ஒவ்வொருமாதம் 350 கோடி டாலர் தேவை எனக்கூறி முடிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "போர்ச்செலவு:ஒபாமா அரசுக்கு பென்டகன் எச்சரிக்கை"
கருத்துரையிடுக