பெங்களூர்:உயர்நீதிமன்றங்களிலிலுள்ள நீதிபதிகள் தவறு செய்யும்பொழுது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க இயலாத சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விஷப்பல் இல்லாத பாம்பு போன்றவர் என்று கர்நாடகா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியான டி.வி.ஷைலேந்திர குமார் கர்நாடகா வழக்கறிஞர்கள் மாநாட்டு மலரில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவின் உச்சநீதிபீடத்தின் நேர்மையான பொறுப்பின் செயல்திறனைப்பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை குற்ற விசாரணை செய்யும் பாராளுமன்றத்தின் நடவடிக்கையிலும் அவர் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையை தனது வலைப்பூவிலும் பதிவுச்செய்துள்ளார். "நீதி மற்றும் சட்டத்தின் பொறுப்புணர்வு" என்பது புரிந்துக்கொள்ளவியலாத பொருள் என்றும் பரஸ்பர விரோதமான செய்தியை இது பகிர்ந்துக்கொள்வதாகவும் அக்கட்டுரையில் ஷைலேந்திரகுமார் குறிப்பிடுகிறார்.
உயர் நீதிமன்றங்களிலிலுள்ள நீதிபதிகள் தவறிழைக்கும் பொழுதுதான் "நீதி மற்றும் சட்டத்தின் பொறுப்புணர்வு" என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ள இயலும் என்று கூறும் ஷைலேந்திரகுமார் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி தினகரனின் நில ஆக்கிரமிப்பு விவாதத்தை விமர்சிக்கின்றார்.
இந்தியாவின் தலைமைநீதிபதி என்பவர் சட்டம் மற்றும் நீதி கட்டமைப்பின் தலைவராவார். நீதிபதிகளிடமிருந்து தவறுகள் ஏற்படும்பொழுது நேர்மையான முறையில் பொறுப்பை நிர்வகிப்பது தலைமை நீதிபதியின் கடமையாகும். அரசியல் சட்டம் அனுமதிக்காததால் வெறும் நேர்மையான பொறுப்புணர்விற்கு எவ்வித அர்த்தமுமில்லை. இத்தகைய தலைமைய நீதிபதி விஷப்பல் இல்லாத பாம்பைப்போன்றவர்; சீற மட்டும்தான் தெரியும் ஆனால் கடிக்க தெரியாத நிலை. தவறிழைக்கும் நீதிபதிகளை ஒழுக்கநடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஷைலேந்திரகுமார் அக்கட்டுரையில் எழுதியுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தினகரனுக்கு எதிராக ராஜ்யசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஷைலேந்திரகுமார் வரவேற்றுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இந்தியாவின் தலைமை நீதிபதி விஷப்பல் இல்லாத பாம்பு: கர்நாடகா நீதிபதி"
கருத்துரையிடுக