ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 30 ஆம் நாள் ஒரு வீரத்தின் நினைவலைகளை நம் உள்ளங்களில் புதுப்பித்துக்கொள்கிறது.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாளின் குளிரான அதிகாலைப் பொழுதில்தான் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கிய ஈராக்கின் தவப்புதல்வன் சதாம் ஹுசைன் புன்சிரிப்போடு தூக்குக்கயிற்றை முத்தமிட்டார்.
நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள் தனது மகன் இஸ்மாயீல்(அலை...)அவர்களை அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க பலிகொடுக்க முற்பட்ட நிகழ்வை நினைவுகூறும் தியாகத்திருநாளின் அதிகாலைப்பொழுதில் சதாம் ஹுசைன் அல்லாஹ்வை புகழ்ந்து தனது இரத்தத்தையும் உயிரையும் பலிகொடுத்தார். தனது நாட்டு குடிமக்களில் ஒரு பிரிவினரிடம் காட்டிய கொடூரத்திற்கும் அநீதிக்குமான பாவக்கறைகளை தனது இரத்த சாட்சி மூலம் கழுகினார் சதாம்.
துயரத்திலிருந்தும்,பசியிலிருந்தும் நாட்டை உன்னத நிலைக்குக்கொண்டு சென்ற வெற்றி வரலாறுதான் சதாம் ஹுசைனுடையது.ஈராக்கின் தலைநகரான பாக்தாதின் வடக்கிலிலுள்ள திக்ரிதின் அடுத்துள்ள அல் அவ்ஜாவில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 -ஆம் நாள் ஒரு ஆட்டிடையர் குடும்பத்தில் பிறந்த சதாம் ஹுசைன் சுதந்திரச் சிந்தனைகளைக் கொண்டிருந்தார் என அவரது நண்பர்கள் கூறுகின்றார்கள். தந்தை காணாமல் போனபின்னால் தாய் மறுமணம் புரிந்தவுடன் தனது சொந்த ஊரைவிட்டு ஓடிய சதாம் ஹுசைன் பாத் கட்சியின் மூலம் 1979 ஆம் ஆண்டு ஈராக்கின் அதிபரானார்.
தெற்கே ஷியாக்கள்,வடக்கே குர்துக்கள், மத்திய பகுதியில் சுன்னிகள் என பிரிந்துக்கிடந்த ஈராக்கை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கெதிராக எழுந்த எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்கினார்.1980 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகளின் ஆதரவோடு ஈரானின் மீது தொடுத்த போர் இரு நாடுகளையும் ஏழ்மையான நிலைக்கொண்டுச் சென்றதைத்தவிர வேறொரு பயனும் விளையவில்லை.
1980களில் ரஷ்யாவிடம் நல்லுறவைக்கொண்டிருந்த சதாம் ஹுசைன் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் கள்ளக்குழந்தையான இஸ்ரேலுக்கு பீதியை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒரேயொரு அதிபரான சதாமை அடக்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு ஈராக்கின் குவைத் மீதான ஆக்கிரமிப்பு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள்தான் அந்த ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.ஈராக்கின் எண்ணை வளத்தில் ஒரு கண் வைத்திருந்த அமெரிக்கா குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தவுடன் உடனே குவைத்திற்கு உதவி என்ற போர்வையில் களத்தில் குதித்தது. குவைத்திலிருந்து ஈராக் வாபஸ் வாங்கியபிறகு அமெரிக்காவும் கூட்டுப்படையினரும் அப்பகுதியை விட்டுச்செல்லவில்லை. தொடர்ந்து சி.ஐ.ஏ மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் துணையுடன் ஈராக்கைப்பற்றியும் சதாமைப்பற்றியும் அவதூறான கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன.இக்கட்டுக்கதைகளின் துணையுடன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவும் அதன் கூட்டுப்படையினரும் ஈராக்கிற்கு நாச சக்திகளாக மாறினர்.
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் நாள் பாக்தாத் வீழ்ந்தது. அமெரிக்க விமானங்கள் பாக்தாதின் மேலே வட்டமிடும்பொழுதும் சதாம் ஹுசைன் புன்சிரிப்போடு மக்கள் மத்தியில் தோன்றியது உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.பின்னர் சதாமிற்கு தலைமறைவு வாழ்க்கையாகயிருந்தது.
2003 ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் நாள் திக்ரிதிலிருந்து 10 கிலோமீட்டர் தெற்கிலிலுள்ள அத்வார் நகரத்தில் ரகசிய இடத்திலிருந்து சதாம் ஹுசைன் அமெரிக்க ராணுவத்திடம் சிக்கினார்.விசாரணை நாடகத்திற்கு முன்பே சதாம் ஹுசைனுக்கு மரணத்தண்டனைத்தான் என்பது உறுதிச்செய்யப்பட்டிருந்தது.டிசம்பர் 30 ஆம் நாள் உள்ளூர் நேரம் அதிகாலை 6 மணிக்கு தூக்குகயிறை நோக்கி நடக்கும்பொழுது சதாம் ஹுசைனின் முகத்தில் எந்தவொரு பயமுமின்றி அமைதி தவழ்ந்தது.தூக்கு கயிற்றில் ஏற்றி கொல்வதைவிட துப்பாக்கியால் சுட்டு தன்னை இரத்த சாட்சியாக ஆக்கவேண்டும் என்பதே சதாம் ஹுசைனின் கடைசி விருப்பமாகவிருந்தது.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் தனது நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் சதாம் ஹுசைன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், "உங்களுடைய ஆன்மாவில் எதிர்ப்புபோர் இருக்கும் காலம்வரை அவர்களால் உங்களை வெல்லமுடியாது". என்று. பாக்தாதின் தெருக்களில் இதனை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் ஈராக்கின் வீர திருமகன்கள். ஜார்ஜ் W புஷ் செய்த மாபெரும் தவறிலிருந்து முடிந்தவரை விரைவாக ஈராக்கிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஈடுபட்டிருக்கின்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சதாம் ஹுஸைன்:மறக்க முடியாத இரத்த சாட்சி"
கருத்துரையிடுக