29 டிச., 2009

மதுரை ஆதீனம் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

திருச்சியில் நடைபெற்ற காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் 75வது பிறந்த நாள் விழாவில் மதுரை ஆதீனம் காஞ்சி சங்கராச்சாரியாரை முஹம்மது நபியின் அவதாரமாக காண்கிறேன் என்று பேசியதற்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முஹம்மது நபி மனிதர்களிடையே சமத்துவத்தை அனைத்து மனிதர்களும் இறைவனுக்கு முன்பு சமம் என்ற கொள்கையை போதித்தவர். ஆனால் காஞ்சி சங்கராச்சாரியாரோ வர்ணாசிரமக் கொள்கை அடிப்படையில் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டும் கொள்கையை ஏற்றுக்கொண்டவர். மேலும் தற்போது மோசமான குற்றச்சாட்டுகளில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார் இத்தகைய மனிதரைப் பார்த்து நபிகளின் அவதாரம் என்று கூறுவது ஆச்சரியமளிக்கிறது. மேலும் இது போன்ற பேச்சுக்கள் பிற சமூக மக்களின் மனதைப் புண்படுத்தவே செய்யுமன்றி வேறில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற பேச்சுக்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என அதன் மாநில பொதுச் செயலாளர் பக்ரூதீன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மதுரை ஆதீனம் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்"

பெயரில்லா சொன்னது…

assalamu alaikum மதுரை ஆதீனம் appadi pasavillai enru I.N.T.J bakkaredam theliyupathinar enpadu theriyatha

கருத்துரையிடுக