நியூயார்க்:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்திய கொடூரத்தாக்குதல் நடைபெற்று ஓராண்டு முடிவடைந்தநிலையில் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதமதத்தைச்சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்ட பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது.
இந்தப்பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் உலக நாடுகள் காஸ்ஸாவில் ஃபலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு நடத்திய கொடூர குற்றங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வற்புறுத்தினர்.
யூத மதத்தைச்சார்ந்த ரப்பி(யூத மத அறிஞர்) ஜோசஃப் கோஹன் IRNA செய்தி நிறுவனத்திற்கு அளித்தப்பேட்டியில், "ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு சரியான தருணம் இது.மேலும் இஸ்ரேலின் இனப்படுகொலையைப் பற்றி பேசுவதற்கும் சரியான நேரமிது. இஸ்ரேலிய அரசு ஃபலஸ்தீன் மக்களுக்கு மட்டுமல்ல யூத மக்களுக்கும் எதிரானது" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று துவங்கிய காஸ்ஸா மீதான இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலில் சுமார் 1400 க்குமேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஃபலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். 60,800 ஃபலஸ்தீனர்கள் இடமாற்றப்பட்டனர். 17,000 வீடுகள் சேதமடைந்தன.
ஐ.நா வால் நியமிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவைச்சார்ந்த யூதரான நீதிபதி கிளாட் ஸ்டோன் தனது 575 பக்க அறிக்கையில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி போர்க்குற்றம் புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இஸ்ரேல் ஒரு மூடை சிமெண்டையும், ஒரு துண்டு கண்ணாடியைக்கூட காஸ்ஸாவிற்குள் அனுமதிக்காததால் சேதமடைந்த 25 ஆயிரம் வீடுகள் இன்னும் பழுதுப்பார்க்கபடாமலேயே உள்ளன. என அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
செய்தி:Press tv.
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேலின் கொடூரத்தைக் கண்டித்து நியூயார்க்கில் பேரணி"
கருத்துரையிடுக