டெஹ்ரான்:ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் துவங்கிய அரசுக்கெதிரான போராட்டம் நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களுக்கும் போலீசிற்கும் இடையே பல இடங்களில் மோதல் நடைபெற்றது. பல இடங்களிலும் மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஐந்துபேரில் ஒருவர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மீர் ஹுசைன் மூஸாவியின் உறவினரான செய்யத் அலி மூஸாவி என்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. 35 வயதான அலி இன்கலப் சதுக்கத்தில் வைத்து நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். ஆனால் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டுத்தான் அலி இறந்ததாக போலீஸ் கூறுகிறது. நேற்றுக் கொல்லப்பட்ட 10 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவின் உறுப்பினர்கள் என அரசு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

வன்முறை கூம், ஷிராஷ், இஸ்பஹான், நஜாஃப பாத், மஷ்ஹத், பபூல் பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது. இரண்டு தினங்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தைத்தொடர்ந்து போலீஸ் 300 பேரை கைதுச்செய்துள்ளது. எதிர்கட்சித்தலைவரும், ஃப்ரீடம் மூவ்மெண்டின் தலைவருமான இப்ராஹீம் யஸ்தியை போலீஸ் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. முன் வெளிநாட்டு இலாகா அமைச்சரான யஸ்தி ஜுனில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச்செய்யப்பட்டார்.
சாதாரண மக்கள் ஒன்று கூடும் ஆஷுரா தினத்தில் நாட்டில் வன்முறையை உருவாக்கும் திட்டத்தைத்தான் போராட்டத்தின் மூலம் எதிர்கட்சியினர் நடத்துவதாக ஈரான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடுதான் இந்தப்போராட்டத்தை எதிர்கட்சிகள் நடத்துவதாகவும் அரசு குற்றஞ்சாட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரானில் போராட்டம் பரவுகிறது: 15 பேர் மரணம்"
கருத்துரையிடுக