உலகின் இரண்டு பெரும் ராணுவ சக்திகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒன்றிணைந்து முயன்றபோதும், காஸ்ஸாவை ஆக்கிரமித்து கொடூரமான முறையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்களை கொடூரமாக கொன்று குவித்த பிறகும் தனது ஒரேயொரு ராணுவ வீரனை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய இஸ்ரேல் கடைசியாக ஹமாஸிடம் மண்டியிட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டில்தான் ஹமாஸ் காஸ்ஸா எல்லையில் வைத்து ஷாலிதை கைதுச்செய்தது. பின்னர் ஷாலித் எங்கிருக்கிறார் என்பதை குறித்த தகவலை இஸ்ரேலால் அறிய இயலவில்லை.
நூற்றுக்குமேற்பட்ட ஃபலஸ்தீனர்களை விடுதலைச்செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு ஷாலிதின் வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் வெளியிட்டது. ஷாலித் உரையாற்றும் வீடியோவை இஸ்ரேல் ஹமாஸிடமிருந்து பெற்ற பின்னர் ஃபலஸ்தீன சிறைக்கைதிகளை விடுதலைச்செய்யவும் செய்தது.
ஜெர்மனி நடுவராக செயல்படும் தற்போதைய பேச்சுவார்த்தையில் ஷாலிதின் விடுதலைக்கு பதிலாக உடனடியாக 500 ஃபலஸ்தீன் சிறைவாசிகளையும் பின்னர் 500 ஃபலஸ்தீன் கைதிகளையும் விடுதலைச் செய்யவேண்டும் என்பது ஹமாஸின் நிபந்தனை. 500 பேரில் ஒருவர் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான பர்குதியும் உட்படுவார். ஃபலஸ்தீனர்களின் வருமானத்தை கொடுக்கும் ஆலிவ் செடிகளை இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் பிடுங்கி எறிவதை தடைச்செய்யவேண்டும், காஸ்ஸாவின் புனர்நிர்மாணத்திற்கான பொருட்களை காஸ்ஸாவிற்கு கொண்டு வருவதற்கான தடைகளை நீக்கவேண்டும், 500 ஃபலஸ்தீனர்களுக்கு சிகிட்சைக்காக காஸ்ஸாவிற்கு வெளியே சிகிட்சை பெற அனுமதியளிக்கவேண்டும், 500 ஃபலஸ்தீன் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கூடம் செல்வதற்கான சூழலை உருவாக்குதல் ஆகிய நிபந்தனைகளையும் ஹமாஸ் முன்வைத்தது.
ஆனால் இஸ்ரேல் சிறைக்கைதிகளை மட்டும் விடுதலைச்செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளது. இது ஹமாஸிற்கு அரசியல் ரீதியான ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது. ஆனால் இனி வரும் காலக்கட்டங்களில் இஸ்ரேலிடம் எச்சரிக்கையாகயிருப்பது நல்லது. ஏனெனில் ஷாலிதின் விடுதலைக்குப்பிறகு காஸ்ஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இஸ்ரேலிய விமானம் காஸ்ஸா மக்களுக்கு எச்சரிக்கைவிடும் விதமாக துண்டுபிரசுரங்களை வீசியுள்ளது. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஷாலிதின் விடுதலைக்காக இஸ்ரேல் ஹமாஸிடம் மண்டியிடுகிறது"
கருத்துரையிடுக