வந்தேமாதரம் பாடலை தொடர்ந்து பாடுவேன் என்று ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இதனை பாட வேண்டாம் என தெரிவித்திருந்தனர்.
இந்திய சுதந்திரப் பொன்விழா சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் வந்தேமாதரம் பாடலை பாடியிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாக தெரிவித்துள்ளர்.
பாடலைப் பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்றும் ஒருவருடைய நம்பிக்கையையும் புரிதலையும் மற்றவர் மதிக்க வேண்டும் என்றும் தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்: on "வந்தே மாதரத்தை தொடர்ந்து பாடுவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்"
கருத்துரையிடுக