பெங்களூரு:பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்லூரியில், பகவத் கீதை பாடத்தை போதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
பெங்களூரில் இந்திய மேலாண்மை கல்லூரியில் (ஐ.ஐ. எம்.பி.,) வர்த்தக மேலாண்மையும், பண்டைய அறிவு சார்ந்த மாற்று முறையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஐ.ஐ.எம்.பி., தலைவரும், பேராசிரியருமான மகாதேவா குறிப்பிடுகையில், "மேலாண்மை படிப்புக்கு தேவையான விஷயங்கள், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. எனவே, மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்ப் பது குறித்து வல்லுனர்களின் கருத்தை கேட்டுள்ளோம். பகவத் கீதையில் எந்தெந்த பகுதியை பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவித்த பின், பகவத்கீதையை பாடமாக போதிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
"பல நூறு ஆண்டுகளுக்கு முன், பகவத் கீதையில் கூறப் பட்ட விஷயம் இன் றைய மேலாண்மை நிர்வாகத்துக்கும் பொருந்தும் படியாக உள்ளது. எனவே, பகவத் கீதையை பாடதிட்டத்தில் சேர்க்கலாம் என, இந்த கருத்தரங்கில் பேசிய பலரும் வற்புறுத்தினர்.
source:dinamalar
0 கருத்துகள்: on "மேலாண்மை கல்லூரி பாடத்தில் பகவத் கீதையை போதிக்க முடிவு"
கருத்துரையிடுக