கெய்ரோ:ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் வசமுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஜெர்மன் மத்தியஸ்தர்களின் முயற்சியில் உருவான இவ்வுடன்படிக்கையின் படி கைதிகள் பரிமாற்றம் இரண்டுவாரத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸின் வசமுள்ள இஸ்ரேலிய ராணுவ வீரன் கீலாத் ஷாலிதிற்கு பகரமாக ஃபலஸ்தீன கைதிகளை விடுவிப்பதுதான் உடன்படிக்கையின் சாராம்சம். இவ்விஷயத்தில் இஸ்ரேலிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதிக் கிடைத்தவுடன் கைதிகள் பரிமாற்றம் நடைமுறையில் வரும்.
பெண்களும், குழந்தைகளும் உட்பட 11,500 ஃபலஸ்தீனர்கள் தற்ப்போது இஸ்ரேலிய சிறைகளில் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவ வீரனான ஷாலிதை கைதுச்செய்தது. ஷாலிதிற்கு பகரமாக 450 ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்கப் போவதாக ஃபாக்ஸ் நியூஸ் சானல் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுடன் மேலும் 500 ஃபலஸ்தீனர்களை விடுவிக்கவும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் ஷாலிதை விடுவிப்பதற்கு பகரமாக ஹமாஸ் கோரிய மர்வான் பர்கூத் மற்றும் அஹ்மத் ஸஆத் ஆகியோரின் விடுதலை இரண்டாம் கட்டத்திலேயே நடைபெறும்.
அதேவேளையில் கைதிகள் பரிமாற்றத்தை பகிரங்கப்படுத்த இஸ்ரேல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதிகளின் குடும்பத்தார் அளித்த புகாரைத் தொடர்ந்துதான் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது.
செய்தி:தேஜஸ் மலையாளா நாளிதழ்
0 கருத்துகள்: on "கைதிகள் பரிமாற்றம்: இறுதிக்கட்டத்தில் ஹமாஸ்-இஸ்ரேல் இடையே உடன்பாடு"
கருத்துரையிடுக