வாஷிங்டன்:இஸ்ரேல் மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளம் என்றும் அமெரிக்காவின் தீர்மானங்களுக்கு எதிராக இஸ்ரேலுக்கு நகர இயலாது என்றும் அமெரிக்காவைச்சார்ந்த பிரபல சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி பிரஸ் டிவிக்கு அளித்த தொலைபேசி மூலமான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அமெரிக்காவின் ஆயுதங்களை சேகரித்து வைக்கும் ராணுவதளம் மட்டுமே. அமெரிக்கா தனது ஆயுதங்களை இஸ்ரேலில் சேகரித்து வைத்துள்ளது. ராணுவ ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வு ஆகியவற்றின் பகுதியாகத்தான் இந்த உறவு.
அதனால்தான் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கையில் இஸ்ரேலின் ஆதிக்கம் உண்டென்றாலும் அமெரிக்காவின் கட்டளைக்கு புறம்பாக இஸ்ரேலால் செயலாற்ற இயலாது என்று சோம்ஸ்கி கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்படுத்தும் பீதியை குறித்து முன்னெச்சரிக்கை விடுத்த சோம்ஸ்கி தீவிரவாதத்தை விட இவர்கள் ஏற்படுத்தும் பீதியைத்தான் மக்கள் பயப்படவேண்டியது என்றார். இவர்கள் தொடர்ச்சியாக ஆயுதபலத்தைக்கொண்டு பயமுறுத்துகிறார்கள், பிற நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள், தமது கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள், தாக்குகின்றார்கள். அங்கெல்லாம் பயங்கரவாதத்திற்கும், அராஜகத்திற்கும் உரமிடுகின்றார்கள். கடந்த 3 ஆண்டுகளாக ஈரானுக்கெதிராக அமெரிக்காவில் பொய்பிரச்சாரங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு நோம் சோம்ஸ்கி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் அமெரிக்காவின் ராணுவ ஏஜெண்ட் - நோம் சோம்ஸ்கி"
கருத்துரையிடுக