தோஹா: உலகின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரும், சர்வதேச முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் யூசுஃப் அல் கர்தாவிக்கு மலேசிய நாட்டின் மதிப்புமிக்க விருதான ஹிஜ்ரா ஆஃப் த ப்ராபெட் வழங்கப்படவுள்ளது.
அல்லாஹ் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் நாள் மலேசியநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் வைத்து மலேசிய மன்னர் மிஸான் ஸைனுல் ஆப்தீன் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மலேசிய அமைச்சர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் நபிகளாரின் தூதுத்துவ பணி என்ற தலைப்பில் யூசுஃப் அல் கர்தாவி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். மேலும் மலேசியாவில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளிலும் நேசனல் கவுன்சில் ஆஃப் முஃப்தி கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும் மலேசிய அறிவுஜீவிகளுடனும் நடைபெறும் சந்திப்பிலும் பங்கேற்கிறார்.
இஸ்லாத்திற்காகவும், முஸ்லிம் சமூகத்திற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றும் கர்தாவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது சாலச்சிறந்தது.
மலேசியாவில் 1987 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட துவங்கியது. ஒவ்வொரு ஹிஜ்ரி வருட ஆண்டின் துவக்க நாளில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை இதற்குமுன் எகிப்தின் பிரபல மார்க்க அறிஞர் ஷேக் முஹம்மது இத்ரீஸ் அல் மர்போயி, இந்தோனேசியாவின் முன்னாள் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் ஹஜ் மனோர் ஷசாலி, சிரியாவின் அறிஞர் வாபா அல் சுஹைலி ஆகியோரும் பெற்றுள்ளனர்.
மலேசியாவின் ஹிஜ்ரா நபி விருதைப் பெற்றிருக்கும் டாக்டர் கர்தாவி அவர்கள் இதற்கு முன் 8 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சர்வதேச புனித குர்ஆன் நிகழ்ச்சியில் உலகின் ஆளுமைத்தன்மைக்குரிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சர்வதேச புனித குர்ஆன் நிகழ்ச்சியில் உலகின் ஆளுமைத்தன்மைக்குரிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி அவர்கள் செப்-9 1926 ஆம் ஆண்டு எகிப்திலிலுள்ள அல் கர்பியாவில் பிறந்தார். தனது 2-வது வயதில் தந்தையை இழந்த கர்தாவியை அவருடைய மாமனார் வளர்த்து வந்தார். தனது 10-வது வயதில் அல் குர்ஆனை மனனம் செய்தார். அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் 1953 ஆம் ஆண்டு இஸ்லாமிக் ஜூரிஸ்ப்ரூடன்ஸில் பட்டம்பெற்று வகுப்பிலேயே முதலாவதாக தேறினார்.
1963 ஆம் ஆண்டு மார்க்க விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பொறுப்பில் நியமிக்கப்பட்டாலும் சிறிதுகாலத்திலேயே அங்கிருந்து கத்தருக்கு இடம்பெயர்ந்தார். இது நாள்வரை கத்தர்நாட்டிலேயே வசித்துவருகிறார். 1977 ஆம் ஆண்டு இஸ்லாமிய ஷரீஆ மற்றும் கல்விக்கான பல்கலைகழகத்தை துவக்கினார். சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் கூட்டமைப்பின் இணை நிறுவனராகவும் தலைவராகவும் உள்ளார். மேலும் ஐரோப்பிய ஃபத்வா மற்று ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவராகவும் இணை நிறுவனராகவும் இருக்கிறார்.
கர்தாவி அவர்கள் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். அதில் முக்கியமானது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதும் தடுக்கப்பட்டதும் என்ற நூலாகும்.
Source:islamonline.net
0 கருத்துகள்: on "டாக்டர் யூசுஃப் அல் கர்தாவிக்கு மலேசியா நாட்டின் ஹிஜ்ரா விருது"
கருத்துரையிடுக