காஸ்ஸா:1400 க்குமேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி ஃபலஸ்தீனர்களின் உயிரைக்காவுக்கொண்ட இஸ்ரேலின் கொடூரத்திற்கு ஒரு வருடம் பூர்த்தியாகும்பொழுது நெஞ்சை பிளியும் சோகத்தை பகிர்ந்துக்கொண்டார்கள் காஸ்ஸா மக்கள்.
நேற்று காலை 11.20 க்கு காஸ்ஸா பகுதி முழுவதும் சைரன் முழங்கியது. operation cast lead என்ற செல்லப்பெயரிட்டு இஸ்ரேல் முதன்முதலாக காஸ்ஸாவில் குண்டுமழைப்பொழிந்தது இந்த நேரத்தில்தான். இஸ்ரேலுக்கெதிராக காஸ்ஸா முழுவதும் கண்டனப்பேரணிகள் நடைபெற்றது. டிசம்பர் 27 ஆம் துவங்கி ஜனவரி 18 ஆம் தேதி முடிவடைந்த இஸ்ரேலின் இனப்படுகொலையை நினைவுக்கூறும் கண்டன நிகழ்ச்சிகளை 22 தினங்கள் நடத்துவதற்கு ஹமாஸ் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
எந்தவொரு நியாயமுமில்லாமல் காஸ்ஸாமீது இஸ்ரேல் நடத்திய கொடூர இனப்படுகொலைப்பற்றிய விழிப்புணர்வை உலகத்திற்கு ஏற்படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடுச்செய்துள்ளதாக ஹமாஸின் செய்தித்தொடர்பாளர் இல்ஹாப் அல் ஹுசைன் கூறினார். சியோனிஷ யுத்தத்தை நடத்தியவர்கள் நீதிக்குமுன்னால் கொண்டுவரப்படவேண்டுமென்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் நடத்திய போரால் எங்களுடைய பலத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலவில்லை என்று மூத்த ஹமாஸ் தலைவர் அஹ்மத் மஹர் கூறினார். பிறந்த மண்ணை காப்பாற்றுவதற்கான எங்களது தற்காப்பு போரை எவராலும் தகர்க்க இயலாது என்றும் அதுத்தொடரத்தான் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
டிசம்பர் 31 அன்று நடைபெறும் காஸ்ஸா சுதந்திர அணிவகுப்பில் ஐந்து லட்சம் ஃபலஸ்தீனர்களுடன் 43 நாடுகளிலிலுள்ள 1300 பிரதிநிதிகளும் பங்கேற்கின்றார்கள். எகிப்திலிருந்து கால்நடையாகத்தான் இப்பிரதிநிதிகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். எல்லைகளில் தடையை நீக்க இஸ்ரேலோடு போராட்டக்காரர்கள் கோருவார்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் கொடூரத்தின் நினைவலைகளில் காஸ்ஸா மக்கள்"
கருத்துரையிடுக