பாகிஸ்தானிலிலுள்ள வசீரிஸ்தான் பகுதியில் உளவுப்பார்த்ததாக கைதுச்செய்யப்பட்ட 5 அமெரிக்கர்களை விடுதலைச்செய்வதற்கு பகரமாக அமெரிக்க ராணுவத்தால் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கும் டாக்டர்.ஆஃபியா சித்தீக்கியை விடுதலைச்செய்யவேண்டும் என்ற பரிந்துரையை அரசுக்கு அனுப்பியிருப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவலகம் கூறியுள்ளது.
இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு பேட்டியளித்த மூத்த வெளிநாட்டு அலுவலக அதிகாரி கூறுகையில், "கைதுச்செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை மாற்று பரிமாற்றம் இல்லாமல் விடுதலைச்செய்யக்கூடாது என்று பாக்.அதிபருக்கும், பிரதமருக்கும் பரிந்துரைசெய்துள்ளோம்" என்றார் அவர்.
கைதுச்செய்யப்பட்ட அமெரிக்கர்களை உடனே விடுதலைச்செய்ய கோரியதோடு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைச் செய்வதற்கு எஃப்.பி.ஐ குழுவொன்றை அனுப்பியது. ஆனால் மனித உரிமை அமைப்பொன்று சமர்ப்பித்த மனுவில் பாகிஸ்தான் நீதிமன்றம் அமெரிக்கர்களை விடுவிப்பதற்கு தடை விதித்தது.
கடந்த 2003 ஆம் ஆண்டு டாக்டர் ஆஃபியா சித்தீக்கி மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர் அமெரிக்காவால் கைதுச்செய்யப்பட்டு ஆஃப்கன் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுகிறார் என்ற செய்தி வெளியானது.
ஆஃபியா தற்போது அமெரிக்க சிறையில் உள்ளார். காயிதே-இ-ஆஸம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர்.இஸ்தியாக் அஹ்மத் கூறுகையில், கைதி பரிமாற்றத்திற்கு பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்பதை தான் நம்பவில்லை என்று கூறுகிறார்.
Source:islamonline.net
0 கருத்துகள்: on "கைதிகள் பரிமாற்றம்: விடுதலைச் செய்யப்படுவாரா டாக்டர் ஆஃபியா சித்தீகி?"
கருத்துரையிடுக