சமூக முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்ட பரந்த சிந்தனைக் கொண்ட இயக்கங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படத்தயாராக இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பெங்களூரில் வைத்து நடைபெற்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் தேசிய கமிட்டிக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் இந்த அரசுக்கு உண்மையிலேயே சிறுபான்மையினரின் முன்னேற்றத்தில் அக்கறையிருந்தால் மிஸ்ரா கமிசன் அறிக்கையை உடனடியாக முறைப்படி செயல்படுத்தவேண்டும் என்றும், இதன் மூலம் கல்வி மற்றும் சமூக தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச்செயலாளர் அனீஸுஸ்ஸமான் வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் மற்ற கமிசன் அறிக்கைகளைப்போல் இந்த அறிக்கையையும் அரசு கிடப்பில் போட்டுவிடுமோ என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை எல்லா மாநிலங்களிலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி மேற்க்கொள்ளப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடுமுழுவதிலுமிருந்து உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
source:twocircles.net
1 கருத்துகள்: on "சமூக முன்னேற்றத்தில் அக்கறைக்கொண்ட அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து செயல்படத் தயார்- கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"
insha allah manavarhalai thiratti indhiyavai valapaduthuvom
கருத்துரையிடுக