29 டிச., 2009

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் இஸ்லாத்தை ஏற்றார்

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார்.
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.
source:alarabia

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் இஸ்லாத்தை ஏற்றார்"

கருத்துரையிடுக