8 டிச., 2009

பாபரி மஸ்ஜித் புனர்நிர்மாணம் மூலம் நாட்டின் மானம் காக்கப்பட வேண்டும் - நீதிபதி கிருஷ்ணய்யர்!

தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் புனர் நிர்மாணித்து நாட்டின் மானத்தைக் காக்க வேண்டும் என நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.
கேரள முஸ்லிம் இளைஞர் அமைப்பு கொச்சியில் நடத்திய மதசார்பின்மை பாதுகாப்பு கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டின் ஆத்மாவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் பூமி குறித்த பிரச்சனை முன்னரே தீர்க்கப்பட்டிருக்கும் எனில் மஸ்ஜித் தகர்க்கப்பட்டிருக்காது. இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமதம் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டது.
சமத்துவத்தினைப் போதிக்கும் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானதாகும். உலக சகோதரத்துவம் என்ற இஸ்லாமிய தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட வகையில் நானும் ஒரு முஸ்லிமே" என்று கிருஷ்ணய்யர் கூறினார். "பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை அதன் புனர் நிர்மாணம் மட்டுமே சரி செய்யும்" என்றும் அவர் கூறினார்.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபரி மஸ்ஜித் புனர்நிர்மாணம் மூலம் நாட்டின் மானம் காக்கப்பட வேண்டும் - நீதிபதி கிருஷ்ணய்யர்!"

கருத்துரையிடுக