துபாய் இஸ்லாமிய வங்கி (DIB), இவ்வருடத்தின் மிகச் சிறந்த இஸ்லாமிய வர்த்தகம் மற்றும் நிதி என்பவற்றுக்கான வங்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
துபாய் இஸ்லாமிய வங்கி இவ்விருதினைப் பெறுவது இது மூன்றாம் தடவையாகும். இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, வங்கியின் வர்த்தக வங்கியியல் தலைவர் டாக்டர் அத்னான் சில்வான் மற்றும் மத்திய செயற்பாட்டுப் பிரிவின் தலைவர் முஹம்மத் அல்நஹ்தி ஆகியோர் விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
"மூன்றாவது முறையாகவும் இவ்விருதினைப் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது" என டாக்டர் அத்னான் சில்வான் தெரிவித்தார்.
"கடந்த 12 மாதங்களுக்கு மேலாக உலக பொருளாதார மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், துபாய் இஸ்லாமிய வங்கி தனது செயற்பாடுகளையும் சேவைகளையும் விஸ்தரித்து மிகத் திறமையாக பணியாற்றி வருகின்றது" எனவும் அவர் தெரிவித்தார்.
source:iqna,DIB
0 கருத்துகள்: on "துபாய் இஸ்லாமிய வங்கி(DIB) ,இஸ்லாமிய வர்த்தகம் மற்றும் நிதிக்காண மிகச் சிறந்த வங்கியாக தேர்வு"
கருத்துரையிடுக