19 டிச., 2009

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்


*முஸ்லிம்களுக்கு தொழில், கல்வி துறைகளில் 10 சதவீதமும், இதர சிறுபான்மையோருக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.


*அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிகளை மதத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் தங்களை இணைத்துக்கொள்வோரையும் இதில் உட்படுத்தவேண்டும்.

*சிறுபான்மையினரல்லாத எல்லா கல்விநிலையங்களிலும் 15 சதவீத இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும். இதில் 10 சதவீதத்தை மொத்த சிறுபான்மையினரில் 73 சதவீதமாகயிருக்கும் முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவீதத்தையும் அளிக்கவேண்டும்.

*தேசிய ஒருமைப்பாட்டுணர்வின் அடிப்படையில் பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தற்ப்பொழுது அவர்களின் உரிமை 50 சதவீதம் மட்டுமே. இதர பெரும்பான்மையினருக்கு 50 சதவீதம் அளிக்கப்படுகிறது. இதே நீதிதான் சிறுபான்மையினரல்லாத கல்விநிறுனங்களில் நிச்சயிக்கப்பட்ட சதவீதத்தை சிறுபான்மையினருக்கும் வழங்கவேண்டும். ஒதுக்கிவைக்கப்பட்ட 10 சதவீதத்தில் முஸ்லிம்களை கிடைக்காத பட்சத்தில் இதர சிறுபான்மையினருக்கு அதனை ஒதுக்கவேண்டும்.

*அரசியல் சட்டம் பிரிவு 16(4)ன் படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

*மத்திய மாநில அரசு நிறுவனங்களின் எல்லா பிரிவுகளிலும் 10 சதவீதத்தை முஸ்லிம்களுக்காக ஒதுக்கவேண்டும். இதிலும் முஸ்லிம்கள் வராத பட்சத்தில் அதனை இதர சிறுபான்மையினருக்கு வழங்கவேண்டும்.

*வக்ஃப் சொத்துக்களை பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள், ஹாஸ்டல்கள், கல்வி நிலையங்கள், நூலகம் ஆகியன துவங்குவதற்கான சட்ட அனுமதியை வக்ஃப் போர்டுகளுக்கு வழங்கவேண்டும்.

போன்றவை இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்"

கருத்துரையிடுக